Tuesday, September 22, 2015

ஜெனிவாவில் தமிழர்கள் போராட்டம்

தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஜெனீவா ஐ.நா முன்றலில் புலம்பெயர் தமிழ்மக்களின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஜெனீவா ஐ.நா முன்றலில் புலம்பெயர் தமிழ்மக்களின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழக உணர்வாளர்கள் பங்கெடுத்துள்ளனர்.

ஐ.நா மனித உரிமைச்சபையின் முப்பதாவது கூட்டத் தொடரில் சிறிலங்கா விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்த போராட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி மற்றும் இயக்குனர் திரு.வ.கௌதமன் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் பேராசிரியர் திரு. கல்யாணசுந்தரம் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.

தமிழினப் படுகொலையாளிகளை அனைத்துலக குற்றவியில் நீதீமன்றத்திடம் பாரப்படுத்துமாறு ஓரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கையொப்பமிட்டுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்காக மக்கள் ஜெனீவாவில் அணிதிரண்டுள்னர் என்பது குறிப்பிடதக்கது 

மது பாட்டில் விற்ற பெண்ணை கைது செய்ய கோரி சாலை மறியல்

ஏற்காட்டில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கீரைகாடு கிராமம். இந்த கிராமத்தில் பெட்டிக்கடையில் அனுமதியின்றி மது பாட்டில் வைத்து விற்பணை செய்ததாக பலமுறை பொதுமக்கள் சார்பில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது நாங்கள் ஆய்வு நடத்தியபோது எதுவும் சிக்கவில்லை என்றும்,  ஆதாரத்துடன் புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. 


இதையடுத்து மது விற்றதாக அறிந்த பொதுமக்கள் அந்த பெட்டிக்கடையில் இருந்த 200க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து, இரவு 9மணி முதல் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேலீசார் சமரசம் செய்தும் அவர்கள் கலைவதாக இல்லை. மறியலின் போது  அப்பகுதியில் மழை பேய்த பொதும், மதுபானம் விற்ற பெண்ணை கைது செய்யும் வரையில் தாங்கள் சமரசம் ஆவதாக இல்லை என அவர்கள் தெரிவித்து மழையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுபிக்சா உரிமையாளரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி

அதிக வட்டி தருவதாக 900 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த நிதி நிறுவன அதிபர் ஆர்.சுப்ரமணியத்தின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னையை சேர்ந்த விஸ்வபிரியா முதலீட்டு நிறுவனம் அதிக வட்டி தருவதாக உத்தரவாதம் அளித்து ஆயிரக்கணக்கான பொதுமக்களிடமிருந்து 900 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகளை பெற்று ஏமாற்றியதாக நிறுவனங்களின் பதிவாளருக்கு கடந்த 2013ஆம் ஆண்டு புகாரளிக்கப்பட்டது. அதேபோல சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரிடமும் பணத்தை பறிகொடுத்த பொதுமக்கள் புகாரளித்தனர். 18 மாதங்களுக்கு பிறகு ஒரு பெண் உள்ளிட்ட 6 நிர்வாகிகள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 8-ஆம் தேதி ஜாமின் பெற்றனர்.

இந்நிலையில், விஸ்வப்பிரியா, சுபிக்ஷா உள்ளிட்ட 49 நிறுவனங்களை தோற்றுவித்து தலைமறைவாகியுள்ள ஆர்.சுப்ரமணியம் முன் ஜாமின் கோரி வழக்கு தொடர்ந்தார். அவரது கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என வேதாந்தகுமார் என்ற முதலீட்டாளர் இணைப்பு மனுத்தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின்போது, வேதாந்தகுமார் மற்றும் காவல்துறையில் சுப்ரமணியத்துக்கு முன் ஜாமின் கொடுக்கக்கூடாது என்றும், கைது செய்து விசாரித்தால் தான் முழுமையான தகவல்கள் கிடைக்கும் என்றும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி வி.ராமசுப்ரமணியன், முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Thursday, September 17, 2015

இசைப்பிரியா திரைப்படத்தை தடுக்கிறார் எஸ்.வி.சேகர் இயக்குனர் கணேசன் குற்றச்சாட்டு

இலங்கை தமிழ் செய்தியாளர் இசைப்பிரியாவின் மரணத்தை

தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு தணக்கை வழங்குவதை

எஸ்.வி.சேகர் தடுத்து வருவதாக  திரைப்பட இயக்குனர்

குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையில் தொலைக்காட்சியில் செய்தியாளராக

பணியாற்றிய இசைப்பிரியா இறுதிக்கட்ட போரின் போது சிங்கள

ராணுவத்தால் கொல்லப்பட்டார். அவரின் வாழ்க்கையை தழுவி

எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம் போர்களத்தில் ஒரு பூ.

இப்படத்தை இயக்கிய கணேசன் சென்னையில்

செய்தியாளர்களை சந்தித்தாா்.



இந்தியா மற்றும் இலங்கை அரசின் நட்புக்கு எதிராக

இத்திரைப்படம் அமைத்திருப்பதால் இதற்கு மத்திய திரைப்பட

தணிக்கை குழு முதலில் அனுமதி வழங்க மறுத்து விட்டதாக

திரைப்பட இயக்குனர் கணேசன் கூறினார். மேலும், தணிக்கை மேல்முறையீட்டு குழுவிடம்

முறையிட்ட போது படத்திற்கு அனுமதி அளிக்க குழு முன்

வந்ததாகவும், அதனை குழு உறுப்பினர் எஸ்.வி.சேகர்

தடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.


திரைப்படத்தில் தமிழக

முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கைக்கு எதிராக தீர்மானம்

நிறைவேற்றிய காட்சி இருப்பதால், அதிமுக-வில் இருந்து

வெளியேற்றப்பட்ட எஸ்.வி.சேகர் இதனை தடுப்பதாகவும்

இயக்குனர் கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மெரினா கடற்கரையில் பாராசூட் பயணம்

சென்னையின் புதிய சுற்றுலாவாக மாறியுள்ளது பாராசூட்

சயிலிங். மெரினா கடற்கரையில் வானத்தில் பறக்கும் பாராசூட்

பயணம் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.


சென்னை மெரினா கடற்கரையில் தினமும் மாலை 3 மணி

முதல் 6 மணி வரை பாரா சயிலிங் நடத்தப்படுகிறது. ஜுப்பில்

கட்டப்பட்ட பாராசூட்டில் பொது மக்கள் ஏற்றப்பட்டு வானத்தில்

பறக்கின்றனர். சென்னையில் முதன் முதலாக இந்த பாராசூட்

சாகச விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு

மாத காலமாக சென்னை மெரினா கடற்கரையில் இந்த பாராசூட்

சாகச பயணம் நடைபெற்று வருகிறது. இது சென்னையில்

தற்போது புதிய சுற்றுலாவாக உருவாகியுள்ளது. ஆர்வத்துடன்

பலர் இதில் பயணிக்கின்றனர்.


தமிழக சுற்றுலாத்துறை , சென்னை வான்வெளி கிளப் மற்றும்

கோயம்புத்தூரைச் சேர்ந்த இந்திய வான்வெளி விளையாட்டு

மற்றும் அறிவியல் மையம் இணைந்து இந்த பாரா சயிலிங்

பயணத்தை வழங்கி வருகிறது. இந்த பாராசூட்டில் பயணிக்க

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு 300 ரூபாயும், பெரியவர்களுக்கு

500 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த

பாராசூட் பயணத்தை 6 வயது முதல்  யார் வேண்டுமானாலும்

செய்யலாம். இந்த பாராசூட் பயணத்திற்கு முன் பயிற்சி

அவசியமில்லை என்று கூறப்படுகிறது. பாராசூட்டின் நுனி

ஜுப்பில் பாதுகாப்பாக கட்டப்படுகிறது. பாராசூட்டில் பயணிப்பவர்

பாராசூட்டுடன் கட்டப்படுகிறார். பாதுகாப்பிற்க்கு ஹெல்மெட்

வழங்கப்படுகிறது. இதனால் பயணிப்பவருக்கு எந்த பாதிப்பும்

இல்லை. ஜுப் வேகமாக இழுக்கும் போது பாராசூட் மேலே

செல்கிறது. அப்போது பாராசூட்டில் பயணிப்பவர்  மெரினா

கடற்கரையின் அழகை வானத்தில் பறந்த படி ரசிக்கலாம்.

கடலின் அழகையும் ரசிக்கலாம்.

இதேபோல கடலில் பறக்கும் பாராசூட்டும் விரைவில் மெரினா

கடலில் அறிமுகப்படுத்தப்படுகிறது.  தமிழக மாணவர்களுக்கு

வான்வெளி விளையாட்டுகளை அறிமுகப்படுத்த வேண்டும்

என்ற அப்துல் கலாமின் கனவை நினைவாக்கும் வகையில் இந்த

பாராசூட் விளையாட்டு சாகசம் தொடங்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் திட்டமிடப்பட்ட இன அழிப்பு: சுவிஸ் ஈழத்தமிழரவையின் பிரதிநிதி தர்சிக்கா ஆதங்கம்

இலங்கையில் திட்டமிட்ட இனவழிப்பு இடம்பெற்றுள்ளதாக 

சுவிஸ் நாடாளுமன்றத் தேர்தலில் சோசலிச ஜனநாயகக் 

கட்சியின் சார்பில் பேர்ண் மாநிலத்தில் போட்டியிடும் திருமதி 

தர்சிக்கா கிருஸ்ணானந்தம் வடிவேல் குறிப்பிட்டார்.

ஐ.நா பிரதான மண்டபத்தில் உரையாற்றும்போது அவர் 

இவ்வாறு குறிப்பிட்டார்.


இலங்கையில் அனைத்து விதமான உள்நாட்டு விசாரணையும் 

முழுமையாக தோல்வியடைந்துள்ள நிலையில் நீதிக்காக 

மீண்டும் காத்திருக்க வேண்டியுள்ளது.

இப்போதும் கூட தமிழ் மனித உரிமை ஆர்வலர்களும் 

அரசியல்வாதிகளும் இலங்கை இராணுவத்தால் 

துன்புறுத்தப்படுகின்றனர்.

ஆனால் இந்தச் சிக்கல்களை முழுமையாக தீர்க்கும் பணியில் 

ஐக்கிய நாடுகள் மன்றம் முழுமையாக தோல்வி கண்டுள்ளது.

அரசியல் குறுக்கீடு இல்லாத சுதந்திரமான ஒரு சர்வதேச 

விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் மேலும் தனது 

உரையில் குறிப்பிட்டுள்ளார்.

தர்சிகா கிருஸ்னனந்தன் அவர்கள் சுவிஸ் ஈழத்தமிழரவையில் 

அங்கம் வகிப்பதுடன் தொடர்ச்சியாக தமிழினப்படுகொலைக்கு 

எதிராக குரல்கொடுப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொண்டரின் தற்கொலை முயற்சி அதிர்ச்சி அளிக்கிறது - விஜயகாந்த்

தேமுதிக தொண்டரின் தற்கொலை முயற்சி அதிர்ச்சி அளிக்கிறது - விஜயகாந்த்

தேமுதிகவின் தொண்டர்கள் யாராக இருந்தாலும் கோழைத்தனமாக தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதை நான் எப்பொழுதும் அனுமதிக்கமாட்டேன்  என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.


யாரும் எந்த காலத்திலும் இதுபோன்ற முடிவுகளை எப்பொழுதும் எடுக்ககூடாது என அன்புக்கட்டளையிட்டு கேட்டுக்கொள்வதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டசபைத் தீர்மானம் உற்சாகத்தினையும் உறுதுணையினைவும் அளிக்கின்றது : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

 சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலக

விசாரணையினை வலியுறுத்தி தமிழக சட்டசபையில்

நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஈழத்தமிழ்

உற்சாகத்தினையும் உறுதுணையினையும் தருவதாக

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்

சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு

எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்

என்பதனை வலியுறுத்தியும், இலங்கை தொடர்பாக

பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இலங்கைக்கு

ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்தால்

அதைமாற்ற இந்தியா ராஜதந்திர நடவடிக்கை

மேற்கொள்ள வேண்டும், இலங்கை மீது பொருளாதார

தடை விதிக்க வேண்டும், என்பன உள்ளிட்ட

கோரிக்கைகள் உள்ளடக்கிய தீர்மானமொன்று தமிழக

சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜெனீவாவில் கருத்து தெரிவித்திருந்த

அமைச்சர் சுதன்ராஜ், இவ்வாறானதொரு தீர்மானம்

சிறிலங்காவின் வட மாகாண சபையிலும், நாடுகடந்த

தமிழீழ அரசாங்கத்தின் அரசவையிலும்

நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழக

சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள

தீர்மானம் முக்கியத்துவம் உள்ளதோடு, சிறிலங்கா

தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபையின்

விசாரணை அறிக்கை வெளிவருகின்ற நாளில்

இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள தருணம்

முக்கியத்துவத்தினை தருகின்றதென தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியில்

நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும்

மில்லியன் கையெழுத்து இயக்கத்தில் பல லட்சம்

ஒப்படங்களை இட்டுக் கொண்ட தமிழக மக்களின் மன

உணர்வுகளை தமிழக சட்டசபைத்தீர்மானம்

பிரபலித்துள்ளதாகவும் அமைச்சர் சுதன்ராஜ்

தெரிவித்துள்ளார்.

இத்தீர்மானத்தினை முன்மொழிந்த தமிழக முதல்வர்

செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும், அனைத்து

கட்சியினருக்கும் ஈழத்தமிழர்கள் சார்பில் நாடுகடந்த

தமிழீழ அரசாங்கம் நன்றியினைத் தெரிவித்துக்

கொள்வதாகவும் நாடு கடந்த தமிழீழ அரசின்

ஊடகத்துறை அமைச்சர் சுதன்ராஜ் கூறியுள்ளார்.

பன்னாட்டு விசாரணை மட்டுமே நீதி வழங்கும் - ச.ராமதாஸ்

பன்னாட்டு விசாரணை மட்டுமே நீதி வழங்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும்

மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா. மனித உரிமை

ஆணையம் சார்பில் பன்னாட்டுக்குழு நடத்திய

விசாரணையின் அறிக்கையை ஆணையத்தின்

தலைவர் அல்- உசைன் தாக்கல் செய்திருக்கிறார்.

இலங்கையில் திட்டமிட்டே மனித உரிமை  மீறல்கள்

அரங்கேற்றப்பட்டன என்பதை விசாரணை அறிக்கை

தெள்ளத் தெளிவாக நிரூபித்திருக்கிறது.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள்

குறித்து மட்டும் தான் விசாரணை நடத்தப்பட்டது

என்ற போதிலும், இதில் தெரியவந்துள்ள தகவல்களை

அடிப்படையாக வைத்தே இலங்கையில் இனப்

படுகொலை நடந்தது என்பதை நிரூபிக்க முடியும்.

இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் குண்டு

பாய்ந்த காயங்களுடன் ஆயிரக்கணக்கான தமிழர்கள்

சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைகள் மீது

சிங்களப்படையினர் குறி வைத்து ஏவுகணை மற்றும்

விமானத் தாக்குதல் நடத்தியது, விசாரணை  மற்றும்

சோதனை என்ற பெயரிலும் தமிழ் பெண்களை

பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கியது, போரின்

முடிவில் வெள்ளைக் கொடியேந்தி சரணடைய வந்த

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த

தலைவர்களான நடேசன், புலித்தேவன் ஆகியோர்

சிங்களப்படையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்

பட்டது என அனைத்து போர்க்குற்றச்சாற்றுகளும்

ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கின்றன

என்று விசாரணை அறிக்கையில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது உண்மை,

அதற்குக் காரணமானோர் தண்டிக்கப்பட வேண்டும்,

இக்குற்றச்சாற்றுகள் குறித்து இலங்கை நீதிமன்றத்தில்

விசாரித்தால் நீதி கிடைக்காது என்று கூறியுள்ள மனித

உரிமை ஆணையம், இதுகுறித்து விசாரிப்பதற்காக

கலப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என

அறிவித்திருப்பது தான் அதிர்ச்சியளிக்கிறது. உள்நாட்டு

விசாரணைக்கும், கலப்பு விசாரணைக்கும் பெரிய

வேறுபாடு கிடையாது. உள்நாட்டு விசாரணையில்

முழுக்க முழுக்க இலங்கை நீதிபதிகளே இருப்பார்கள்

என்றால், கலப்பு விசாரணையில் பாதியளவு இலங்கை

நீதிபதிகள் இருப்பார்கள் என்பது தான் உண்மை.

போர்க்குற்றச்சாற்று குறித்த நீதிமன்ற விசாரணையில்

ஒரே ஒரு இலங்கை நீதிபதி இருந்தால் கூட,

தமிழர்களைப் போலவே நீதியும் படுகொலை

செய்யப்பட்டு விடும்.  இதைத் தடுக்க இலங்கை

போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற

விசாரணை நடத்தக் கோரும் தீர்மானத்தை ஐ.நா.

மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இந்திய அரசு

கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று

ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இரண்டு தரப்புக்களும் போர்க்குற்ற செயல்களில் ஈடுபட்டனர் - ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அறிக்கை

இரண்டு தரப்புக்களும் போர்க்குற்ற செயல்களில் 

ஈடுபட்டன: மனித உரிமைப் பேரவையின் 

ஆணையாளர்

இரண்டு தரப்புக்களுக்கும் போர்க்குற்றச் செயல்களில் 

ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் 

பேரவையின் ஆணையாளர் சயிட் ஹல் ஹ_செய்ன் 

தெரிவித்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் 

இலங்கை குறித்த விசாரணை அறிக்கையை 

வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைப் போரின் போது மனித உரிமை மீறல்கள் 

மற்றும் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் குற்றச் செயல்களை இரண்டு தரப்பினரும் 

மேற்கொண்டுள்ளனர்.

குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த 

விசேட ஹைபிரைட் நீதிமன்றமொன்று உருவாக்கப்பட 

வேண்டும்.

இந்த விசாரணைகளில் சர்வதேச நீதவான்கள் 

சர்வதேச சட்டத்தரணிகள் மற்றும் 

விசாரணையாளர்களின் பங்களிப்பும் உள்ளடக்கப்பட 

வேண்டும்.

விசாரணைகளின் மூலம் பாரதூரமான குற்றச் 

செயல்கள் இடம்பெற்றமை உறுதியாகியுள்ளது.

செல் குண்டுத்தாக்குதல், பாலியல் வன்கொடுமை, 

சிறுவர் போராளிகளை படையில் பலவந்தமாக 

இணைத்தல், பலவந்தமான காணாமல் போதல்கள் 

உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் 

இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பல்லின அங்கத்துவம் கொண்ட சர்வதேச 

பங்களிப்புடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமை 

உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் 

குறிப்பிட்டுள்ளார்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* போரில் போது இருதரப்பும் ஏராளமான 

பொதுமக்களை கொன்றன.

* இலங்கையில் போர் காலத்தில் ஏராளமானவர்கள் 

மாயமாகியுள்ளனர்.

*போரில் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் வந்து 

வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களை 

பாரட்டுகிறேன்.

*அறிக்கையில் தாக்குதல் ஆட்கடத்தல் உள்ளிட்ட 

அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

*ஏராளமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

*அறிக்கையில் ஆயிரக்கணக்கான மக்களின் சுதந்திரம் 

பறிக்கப்பட்டது குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது.

*போர்க்குற்றம் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய 

நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும்.

*தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையை இலங்கை 

அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

*போர் நடந்த காலம் இலங்கையின் இருண்ட காலம்.

*எனவே போர் குற்றம் குறித்து சர்வதேச விசாரணை 

நடத்துவது அவசியமாகிறது.

*இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பு 

என இருதரப்புமே போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளன

*இலங்கையின் நீதித்துறை போர்குற்றம் குறித்து 

இதுவரை விசாரிக்கவில்லை.* இலங்கையின் 

தற்போதைய அரசு சிறப்பான நடவடிக்கைகளை 

எடுத்து வருகிறது.

*இலங்கை மக்களை சந்தித்து விசாரணை நடத்த 

இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை

*போர்குற்றம் குறித்து உள்நாட்டு நீதிமன்ற விசாரணை 

உகந்தது அல்ல என்றும் 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, September 15, 2015

செஞ்சி கோட்டை அல்ல கோனேறிக்கோன் கோட்டை - சீமான்


செஞ்சி கோட்டையை, கோனேறிக்கோன் கோட்டை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி செஞ்சி கோட்டை மீட்பு போர் நடத்த உள்ளதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

தேர்தலில் தனித்து போட்டி - சீமான்

தமிழக சட்டமன்ற தேர்தல் எங்களுக்கு ஒரு போர் - வரும் தேர்தலில் தனித்து போட்டி : நாம் தமிழர் கட்சியின் ஒருகினைப்பாளர் சீமான் பேட்டி


விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் மாயோன் பெருவிழாவாக செஞ்சி கோட்டை மீட்பு போர் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பணம் உள்ளவர்கள் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்கியுளார்கள். பணத்தை கொடுத்து வாக்கை பறிக்கும் இழிவு நிலை உருவாகியுள்ளது, திராவிட கட்சிகளை அப்புறபடுத்த ஒரு புரட்சி , ஒரு போரால் தான் முடியும். முதலிட்டாளர்கள் மாநாட்டில் லாப தேவைக்கு தான், மக்கள் சேவைக்கு அல்ல. தமிழ்நாடு முதலிடு செய்வதற்கு ஏதுவாக நாடாக உள்ளது என்றால் அது தலைவன் இல்லாத நாடாக உள்ளது என்று அர்த்தம். இது எல்லாம் ஏமாற்று, இதை நாங்கள் மாற்ற துடிக்கிறோம். வரும் தேர்தலில் தனித்து போட்டி, தமிழகத்தில் ஊழல், பஞ்சம், பட்டினி, லஞ்சம், அடக்குமுறை, கல்வி . மருத்துவம் இலவசம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அது அரசின் கடமை, மற்ற இலவசங்கள் தேவை இல்லை, மதுவிலக்கு என்பது சாதாரண வேலை, மதுவை ஒழிக்கணும் என்று நினைக்கணும், அதிகாரம் கைக்கு வந்தால் அரை நொடி வேலை, ஒரே நாளில் மூட வேண்டும் என்று இந்த அரசிடம் சொல்லவில்லை, 44 ஆண்டுகள் எங்களை குடிக்கவைதிர்கள், காமராஜர் என்ற பெரும் தலைவர் எங்களை பள்ளி திறந்து படிக்க வைத்தார், திராவிட அரசியல் கட்சிகள் மது கடையை திறந்து குடிக்க வைத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மூடுங்கள். ஆனால் அரசுக்கு மதுவை ஒழிக்கும் அக்கறை இல்லை.

இங்கு செஞ்சியில் கூட்டம் நடத்தவதற்கான காரணம் குறித்து பேசிய சீமான், செஞ்சி கோட்டை ராஜா தேசிங்கு கோட்டை என வரலாற்றில் படிக்கப்படுகிறது, ஆனால் அது இல்லை, எங்கள் முன்னோர்கள் ஆனந்த கோன் வழியாக வந்தவர்கள் கட்டிய கோட்டை, இது வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது, வெளியில் இருந்து வந்த தேசிங்கு கோட்டை என்று அழைப்பது எங்களுக்கு அவமானம், அதனால் எங்கள் முன்னோரின் பெயரை நிறுவ வேண்டும் என்றும் கோனேறிக்கோன் கோட்டை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி செஞ்சி கோட்டை மீட்பு போர் நடத்த உள்ளதாக கூறினார்.  முதிலில் கோனேறிக்கோன் கோட்டை என பெயர் அறிவிப்பு செய்வோம், இனிமேல் கோனேறிக்கோன் கோட்டை என அறிவிப்பு பலகை வைப்போம், பின்னர் அந்த பெயரை வெளியில் சொல்லி வருவோம் என சீமான் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு ஜனவரி 13ம் தேதியன்று
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு
செல்லும் அனைத்து தொடர் வண்டிகளிலும் பயண
முன்பதிவு முடிந்ததால் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக செல்லும் பயணிகள்
ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து கன்னியாகுமரி, பொதிகை, நெல்லை, முத்துநகர், அனந்தபுரி, ராமேஸ்வரம், நீலகிரி, சேரன் உள்பட அனைத்து விரைவு ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் வெளியானது. நேற்று இரவு முதல் முன்பதிவு மையங்களில் காத்திருந்தவர்களுக்கு டிக்கெட் கிடைத்த நிலையில், இன்று காலை சென்றவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.