Friday, July 14, 2006

Subavee


பொடா எதிர்ப்பு மாநாட்டில்
கலந்து கொள்ளாதது ஏன் ?

- சுப. வீரபாண்டியன் விளக்கம்


பொடா வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறக்கோரியும், மரண தண்டனை ஒழிப்பு முதலான கோரிக்கைகளை முன் வைத்தும், மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் நாளை (15.07.2006) மாநாடு நடைபெற உள்ளது. அக்கோரிக்கைகள் நியாயமானவையும் வரவேற்க்கத்தக்கவையும் ஆகும்.எனினும், பொடாவைத் தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான முறையில் நடைமுறைப் படுத்தியவரும், இன்றும் அதனை நியாயப்படுத்திக் கொண்டிருப்பவருமானமுன்னாள் முதல்வர் செயலலிதாவின் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களை முன்னிறுத்தி பொடா வழக்குகளைத் திரும்பப்பெறக் கோருவது புரியாத புதிராக உள்ளது.2002 ஆகஸ்டில் பொடா எதிர்ப்பு முன்னணி ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால் அம்முன்னணி செயல்படாமலே போய்விட்டது. செயல்பட வேண்டிய நேரத்தில் செயல்படாமல், இன்று பொடாவை எதிர்ப்பது புதிதாக மலர்ந்துள்ள சனநாயகச் சூழலையே காட்டுகிறது.ஆனாலும் செயலலிதாவை இன்றும் ஆதரிக்கின்ற, அவர் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சியினரை முன்னிறுத்தி நடத்தப்படும் நாளைய மாநாட்டில் பொடாவில் பாதிக்கப்பட்டு ஏறத்தாழ 1ணீ ஆண்டுகாலம் சிறையில் இருந்த என் போன்றோர் கலந்து கொள்ள இயலாத நிலையில் உள்ளோம்.எனினும், நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து நன்மைகளைச் செய்து கொண்டிருக்கும் கலைஞர் தலைமையிலான இன்றைய தமிழக அரசு பழைய பொடா வழக்குகளை விலக்கிக் கொள்ளும் இனிய செய்தியை மிக விரைவில் வழங்கும் என்பது நம் நம்பிக்கை.