Thursday, September 17, 2015

இரண்டு தரப்புக்களும் போர்க்குற்ற செயல்களில் ஈடுபட்டனர் - ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அறிக்கை

இரண்டு தரப்புக்களும் போர்க்குற்ற செயல்களில் 

ஈடுபட்டன: மனித உரிமைப் பேரவையின் 

ஆணையாளர்

இரண்டு தரப்புக்களுக்கும் போர்க்குற்றச் செயல்களில் 

ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் 

பேரவையின் ஆணையாளர் சயிட் ஹல் ஹ_செய்ன் 

தெரிவித்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் 

இலங்கை குறித்த விசாரணை அறிக்கையை 

வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைப் போரின் போது மனித உரிமை மீறல்கள் 

மற்றும் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் குற்றச் செயல்களை இரண்டு தரப்பினரும் 

மேற்கொண்டுள்ளனர்.

குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த 

விசேட ஹைபிரைட் நீதிமன்றமொன்று உருவாக்கப்பட 

வேண்டும்.

இந்த விசாரணைகளில் சர்வதேச நீதவான்கள் 

சர்வதேச சட்டத்தரணிகள் மற்றும் 

விசாரணையாளர்களின் பங்களிப்பும் உள்ளடக்கப்பட 

வேண்டும்.

விசாரணைகளின் மூலம் பாரதூரமான குற்றச் 

செயல்கள் இடம்பெற்றமை உறுதியாகியுள்ளது.

செல் குண்டுத்தாக்குதல், பாலியல் வன்கொடுமை, 

சிறுவர் போராளிகளை படையில் பலவந்தமாக 

இணைத்தல், பலவந்தமான காணாமல் போதல்கள் 

உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் 

இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பல்லின அங்கத்துவம் கொண்ட சர்வதேச 

பங்களிப்புடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமை 

உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் 

குறிப்பிட்டுள்ளார்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* போரில் போது இருதரப்பும் ஏராளமான 

பொதுமக்களை கொன்றன.

* இலங்கையில் போர் காலத்தில் ஏராளமானவர்கள் 

மாயமாகியுள்ளனர்.

*போரில் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் வந்து 

வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்களை 

பாரட்டுகிறேன்.

*அறிக்கையில் தாக்குதல் ஆட்கடத்தல் உள்ளிட்ட 

அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

*ஏராளமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

*அறிக்கையில் ஆயிரக்கணக்கான மக்களின் சுதந்திரம் 

பறிக்கப்பட்டது குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது.

*போர்க்குற்றம் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய 

நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும்.

*தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கையை இலங்கை 

அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

*போர் நடந்த காலம் இலங்கையின் இருண்ட காலம்.

*எனவே போர் குற்றம் குறித்து சர்வதேச விசாரணை 

நடத்துவது அவசியமாகிறது.

*இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பு 

என இருதரப்புமே போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளன

*இலங்கையின் நீதித்துறை போர்குற்றம் குறித்து 

இதுவரை விசாரிக்கவில்லை.* இலங்கையின் 

தற்போதைய அரசு சிறப்பான நடவடிக்கைகளை 

எடுத்து வருகிறது.

*இலங்கை மக்களை சந்தித்து விசாரணை நடத்த 

இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை

*போர்குற்றம் குறித்து உள்நாட்டு நீதிமன்ற விசாரணை 

உகந்தது அல்ல என்றும் 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: