ஹாட்ஸ்டாரில் சேதுபதி திரைப்படம் ரிலீஸ்
விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள அனபெல் சேதுபதி திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் வலைதளத்தில் கட்டணம் செலுத்தி பார்க்கும் வகையில் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் R.சுந்தரராஜனின் மகனான தீபக் சுந்தரராஜன் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் தற்போது விஜய் சேதுபதி திரைப்படம் நேரடியாக வலைதளத்தில் வெளியாவது திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,