Monday, November 12, 2007

ஈழ சுதந்திர போராட்டமும், காந்தியவாதிகளும்.

காங்கிரஸ்காரர்களுக்கு இருக்கும் தேசப்பற்று அடிக்கடி நம்மை மயிர்கூச்செறியச் செய்யும். காங்கிரஸ்காரர்களுக்கு தேசப்பற்று என்பதே தமிழ்ஈழ விடுதலைப்புலிகளை எதிர்ப்பதுதான் என்று கருதியே வந்துள்ளனர்.
காங்கிரஸ் கோஷ்டிகளுக்குள் உள்ள பிரச்சினைகளுக்கே வீச்சரிவாள் வெட்டு, கத்தி குத்து போன்றவை (சத்தியமூர்த்தி பவனிலேயே) நடத்தும் காங்கிரஸ்காரர்களுக்கு விடுதலை போராட்டத்தை நடத்தும் விடுதலைபுலிகளை எதிர்ப்பதற்கு காரணம். விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாம்.
விடுதலைப்புலிகள் செயல்படுகின்ற இலங்கையிலேயே விடுதலைப்புலிகளுக்கு தடை இல்லை என்கிறபோது, இந்தியாவில் எதற்கு தடை என்று கேட்கத் தெரியாத தேசத்துரோகிகளாக, தமிழின விரோதிகளாக இன்னும் எத்தனை காலத்திற்கு இருப்பார்களோ?

மகாத்மா காந்தி, இந்திரா காந்தி கொலைகளை மறந்துவிட்ட காங்கிரஸ்காரர்களுக்கு ராஜீவ் காந்தி (சுப்பிரமணியசாமி, சந்திராசாமியை மறந்துவிட்டு) கொலையை மட்டும் மறக்கமாட்டார்கள

வெளிநாட்டிலும் கற்பழிக்கும் சிங்கள இராணுவ வீரர்கள்

ஹெய்ட்டியில் http://en.wikipedia.org/wiki/Haiti ஐ.நாவின் அமைதிப் படை நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக அனுப்பப்பட்ட சுமார் 950 இலங் கைப் படையினரில் நான்கு அதிகாரிகள் உட்பட 110 இலங் கைப் படையினர் பாலியல் குற்றச்சாட்டுகளின் பேரில் ஐ.நாவினால் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராக இராணுவ நீதிமன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவிருக்கின்றன.