தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஜெனீவா ஐ.நா முன்றலில் புலம்பெயர் தமிழ்மக்களின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஜெனீவா ஐ.நா முன்றலில் புலம்பெயர் தமிழ்மக்களின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழக உணர்வாளர்கள் பங்கெடுத்துள்ளனர்.
ஐ.நா மனித உரிமைச்சபையின் முப்பதாவது கூட்டத் தொடரில் சிறிலங்கா விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்த போராட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி மற்றும் இயக்குனர் திரு.வ.கௌதமன் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் பேராசிரியர் திரு. கல்யாணசுந்தரம் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.
தமிழினப் படுகொலையாளிகளை அனைத்துலக குற்றவியில் நீதீமன்றத்திடம் பாரப்படுத்துமாறு ஓரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கையொப்பமிட்டுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்காக மக்கள் ஜெனீவாவில் அணிதிரண்டுள்னர் என்பது குறிப்பிடதக்கது