Sunday, November 22, 2015

தமிழர்களின் நல்லெண்ணத்தை இழக்கிறது இலங்கை அரசு: விக்னேஸ்வரன் எச்சரிக்கை!

இலங்கை சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர் உயிரிழந்த சம்பவம், அந்நாட்டு அரசின் மீது தமிழர்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் குலைக்க வழிவகுக்கும் என்றும், இலங்கை அரசு தமிழர்களின் நல்லெண்ணத்தை இழக்கிறது என்றும் விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகு 2009-ம் ஆண்டு முதல் ஏராளமான தமிழர்கள் உரிய விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து, பின்னர் சரண் அடைந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கணக்கான பேர் சிறையில் அடைபட்டிருந்தாலும், அவர்களில் பெரும்பாலானோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, தங்களை விடுதலை செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்கள் சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்னைக்கு நவம்பர் 7-ம் தேதிக்குள் தீர்வு காண்பதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா வாக்குறுதி அளித்திருந்தார். இதையடுத்து தமிழ் கைதிகள், தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், நவம்பர் 7-ம் தேதி வரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்பதால் கடந்த சில நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், ஒருவர் உடல்நலம் குன்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், அதிபர் மைத்ரிபால சிறீசேனாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், ''தமிழ் அரசியல் கைதிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக அவர்கள், தங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தப்படுத்துவார்களே தவிர, கைவிடமாட்டார்கள். சிறைக்குள் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தகைய சம்பவங்கள் இலங்கை அரசின் மீது தமிழர்கள் வைத்துள்ள நம்பிக்கையை குலைக்க வழிவகுக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த்துடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நாசர், கார்த்தி, கருணாஸ், மற்றும் பொன்வண்ணன்  ஆகியோர்  21.11.2015 அன்று அவரது இல்லத்தில் சந்தித்தனர். 
தேமுதிக இளைஞரணி செயலாளர் திரு எல்.கே. சுதீஷ் அவர்கள் உடனிருந்தார். 
இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.ஆர்.பி. அணையில் மதகு பழுது - வீணான தண்ணீர்

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் மதகில் ஏற்பட்ட பழுது காரணமாக தொடர்ந்து இரண்டாவதாக நாளாக சுமார் 1000 கன அடி  தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது இதனால் அணையின் நீர் மட்டம் குறைந்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கடந்த பத்து நாட்களாக பெய்த கனமழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.  அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை தன் முழு கொள்ளளவை எட்டி இருந்தது. தொடர்ந்து கடந்த பத்து நாட்களாக முழு கொள்ளளவான 52 அடியில் இருந்த நீர்மட்டம் தற்போது மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது, இதனால் அதிகாரிகள் அணையில் பிரதான ஏழாவது மதகு வழியாக வெளியேற்றப்பட்ட நீரை நிறுத்த முற்பட்டனர் அனால் மதகு பழுது காரணமாக மூட முடியவில்லை.

இதனால் அதிகாரிகள் இயந்திரங்கள் மூலம் மதகை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர் ஆனால் இன்னமும்  மதகு சரிசெய்ய முடியாததால் அணையில் இருந்து சுமார் 1000 கன அடி நீர் தொடர்ந்து ஆற்றில் கலந்து வீணாகி வருகிறது, இதனால் அணையின் நீர்மட்டம் 52 அடியில் இருந்து 50.95 ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருவதால் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு முக்கியமானது - பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் தமிழர்களின் பங்கு முக்கியமானது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில் மலேசியவாழ் தமிழர்களிடையே, பிரதமர் மோடி வணக்கம் என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் உள்ள நட்பு, வெறும் முகத்தில் மட்டுமே சிரிப்பைக் காட்டும் நட்பு இல்லை என்று கூறினார். திருவள்ளுவரின் "முகநக நட்பது நட்பன்று"  என்ற குறளுக்கேற்ப, இந்திய -மலேசிய நட்பு உணர்ச்சிப்பூர்வமாக அமைந்திருப்பதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் தமிழர்களின் பங்கு அளப்பரியது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, மலேசிய வாழ் இந்தியர்களின் அன்பும், நட்பும் தனது இதயத்தில் சிறப்பிடம் பெற்றிருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். கோலாலம்பூரில் உள்ள இந்திய கலாச்சார மையத்திற்கு நேதாஜியின் பெயர் சூட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டீப்பு

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டீக்கப்பட்டுள்ளது. 8 தமிழர் அமைப்புகள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது. இலங்கையில் கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 தமிழர் அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்கள் மீது அப்போதைய ராஜபக்சே அரசு தடை விதித்தது. 


இந்தத் தடையில் தற்போது மாற்றம் செய்துள்ளது சிறிசேன அரசு. தனிநபர்கள் மீதான தடையிலும் மாற்றம் செய்யப்பட்டு, 155 பேர் மீதான தடையும் தளர்த்தப்பட்டுள்ளது. 
பிரிட்டிஷ் தமிழர் அமைப்பு, உலக தமிழர் அமைப்பு, கனடிய தமிழர் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழர் காங்கிரஸ் ஆகியவை தடை நீக்கப்பட்ட அமைப்புகளில் சில. இருப்பினும் விடுதலைப் புலிகள் இயக்கம், நாடு கடந்த ஈழத் தமிழ் அரசாங்கம் உள்ளிட்ட மேலும் 8 அமைப்புகள் மீதான தடை தொடர்ந்து நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Sri Lankan government by a gazette extraordinary issued on Friday delisted several alleged pro-LTEE Tamil organizations and individuals proscribed by the previous government last year. The previous government on March 21, 2014, delisted 16 organizations and 424 individuals under the UN Act No: 45 of 
1968. The Extraordinary Gazette notification issued by the Secretary to the Defense Ministry on 20 November 2015 replaces the previous notification and bans eight organizations and 155 individuals.
Liberation Tigers of Tamil Eelam (LTTE), Tamil Rehabilitation Organization (TRO), Tamil Coordinating Committee (TCC), World Tamil Movement (WTM), Transnational Government of Tamil Eelam (TGTE), Tamil Eelam Peoples Assembly (TEPA), World Tamil Relief Fund (WTRF) and Headquarters Group (HQ) are continued to be listed as terrorist organizations. Global Tamil Forum (GTF), British Tamil Forum (BTF), National Council of Canadian Tamils (NCCT), Tamil Youth Organization (TYO), World Tamil Coordinating Committee (WTCC), Canadian Tamil Congress (CTC), Australian Tamil Congress (ATC), and Tamil National Council (TNC) have been de-listed.
Sri Lanka's Foreign Minister Mangala Samaraweera in March 2015 said the government will review the proscription of 16 Tamil organizations and over 400 individuals by the previous government.