Thursday, September 17, 2015

இசைப்பிரியா திரைப்படத்தை தடுக்கிறார் எஸ்.வி.சேகர் இயக்குனர் கணேசன் குற்றச்சாட்டு

இலங்கை தமிழ் செய்தியாளர் இசைப்பிரியாவின் மரணத்தை

தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு தணக்கை வழங்குவதை

எஸ்.வி.சேகர் தடுத்து வருவதாக  திரைப்பட இயக்குனர்

குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையில் தொலைக்காட்சியில் செய்தியாளராக

பணியாற்றிய இசைப்பிரியா இறுதிக்கட்ட போரின் போது சிங்கள

ராணுவத்தால் கொல்லப்பட்டார். அவரின் வாழ்க்கையை தழுவி

எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம் போர்களத்தில் ஒரு பூ.

இப்படத்தை இயக்கிய கணேசன் சென்னையில்

செய்தியாளர்களை சந்தித்தாா்.



இந்தியா மற்றும் இலங்கை அரசின் நட்புக்கு எதிராக

இத்திரைப்படம் அமைத்திருப்பதால் இதற்கு மத்திய திரைப்பட

தணிக்கை குழு முதலில் அனுமதி வழங்க மறுத்து விட்டதாக

திரைப்பட இயக்குனர் கணேசன் கூறினார். மேலும், தணிக்கை மேல்முறையீட்டு குழுவிடம்

முறையிட்ட போது படத்திற்கு அனுமதி அளிக்க குழு முன்

வந்ததாகவும், அதனை குழு உறுப்பினர் எஸ்.வி.சேகர்

தடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.


திரைப்படத்தில் தமிழக

முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கைக்கு எதிராக தீர்மானம்

நிறைவேற்றிய காட்சி இருப்பதால், அதிமுக-வில் இருந்து

வெளியேற்றப்பட்ட எஸ்.வி.சேகர் இதனை தடுப்பதாகவும்

இயக்குனர் கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

No comments: