ஏற்காட்டில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கீரைகாடு கிராமம். இந்த கிராமத்தில் பெட்டிக்கடையில் அனுமதியின்றி மது பாட்டில் வைத்து விற்பணை செய்ததாக பலமுறை பொதுமக்கள் சார்பில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது நாங்கள் ஆய்வு நடத்தியபோது எதுவும் சிக்கவில்லை என்றும், ஆதாரத்துடன் புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து மது விற்றதாக அறிந்த பொதுமக்கள் அந்த பெட்டிக்கடையில் இருந்த 200க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து, இரவு 9மணி முதல் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேலீசார் சமரசம் செய்தும் அவர்கள் கலைவதாக இல்லை. மறியலின் போது அப்பகுதியில் மழை பேய்த பொதும், மதுபானம் விற்ற பெண்ணை கைது செய்யும் வரையில் தாங்கள் சமரசம் ஆவதாக இல்லை என அவர்கள் தெரிவித்து மழையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment