என்ன தகுதியில்லை இளையராஜாவிற்கு
பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற விருதுகளின் மீது எங்களுக்கொன்றும் ஈடுபாடில்லை. ஆனாலும்.. இந்திய அளவிலான இத்தகைய விருதுகள் எல்லாம்.. அதிகாரமய்ய அக்ரகாரத்து அக்கிரமமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பண்ணைபுரத்து இசைஞானி இளையராஜாவை உலக இசையறிஞர்கள் மிகச்சிறந்த இசைப் பேராசிரியராகப் போற்றிப் பாராட்டுகிறார்கள் இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட மாணவர்களால்லாம் மரியாதை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த இசைப்பேராசான் இந்த முறையும் அவமரியாதை செய்யப்பட்டிருக்கிறார். இந்திய தேசியம் பேசிய நடிகர் திலகம் அவர்களையே தமிழனாய்ப் பார்த்து நிராகரித்த இந்தியர்கள்தாமே அவாள்கள்!
இந்த விருது வழங்குகிற மேதாவிகளிடம் தமிழர்களாகிய நாங்கள் பணிவாக வைக்கிற விண்ணப்பம் ஒன்றே ஒன்றுதான்...
இந்திய ஆண்டைமார்களே! இதற்கு மேலும் எங்கள் இசைஞானிக்கு இத்தகைய விருதுகளைக் கொடுத்து அவமானப் படுத்திவிடாதீர்கள்!
இந்தச் சூழலில் நாங்கள் கேட்கிற கேள்வி ஒன்றே ஒன்றுதான்... பத்மஸ்ரீ, பத்மபூஷன், ஞானபீடம் போன்ற விருதுகளின் தேர்வுத் தகுதிக்கு இசைஞானி... எந்த வகையில் தகுதியில்லாதவராகிறார் என்பதைக்
கூறமுடியுமா... ஸ்வாமிகளே!
- அறிவுமதி.
நன்றி - கருஞ்சட்டைத் தமிழர், பிப்ரவரி 2008.
தொடர்புக்கு - 122/130-பி என்.டி.ராமராவ் தெரு, ரங்கராசபுரம், கோடம்பாக்கம்,
சென்னை - 600 024. பேசி - 044-24732713.
No comments:
Post a Comment