Friday, November 13, 2015

கேரள தேர்தலில் அஇஅதிமுக வெற்றி

கேரளா மாநில உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவினர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கோவை விமான நிலையத்தில் சந்தித்து வாழ்த்து
பெற்றனர். அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களான, பாலக்காடு மாவட்டம்,  கொழிஞ்சாம்பாறை பஞ்சாயத்து 3-வது வார்டு எஸ்.ஹெலன் அமலோற்பவமேரி, 7-வது வார்டு ஜெ.ஸ்ரீரஞ்சனி, எருத்தேன்பதி பஞ்சாயத்து 7-வது வார்டு  எம்.சரஸ்வதி, இடுக்கி மாவட்டம், தேவிகுளம் பஞ்சாயத்து 1-வது வார்டு பாக்கியலட்சுமி, மறையூர் பஞ்சாயத்து 3-வது வார்டு எல்.பாலகிருஷ்ணன்,  பீர்மேடு பஞ்சாயத்து 1-வது  வார்டு எஸ்.பிரவீணா ஆகிய 6 பேர் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளனர்.  அதிலும், 5 மகளிர் வெற்றி பெற்றுள்ளனர். 
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கொட நாட்டில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கோவை விமான நிலையத்தில் வாழ்த்து பெற்றனர்.


தேவிகுளம், மறையூர், பீர்மேடு பகுதிகளில் அதிமுக பெற்றுள்ள வெற்றி, முல்லை பெரியாறு அணைப்பகுதியில் கேரள வனத்துறை மற்றும் நீர்பாசனத் 
துறையினரின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே முல்லைப் பெரியாறு பாசனப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments: