கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மதூர் தாலுக்காவை சேர்ந்தவர் பிருந்தா குமாரி. இவர் கடந்த சனிக்கிழமை அன்று கல்லூரி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது அவரை ஒருதலைபட்சமாக காதலித்து வந்த ரவிக்குமாரால் சரமாரியாக வெட்டபட்டார். ரவிக்குமார் கடந்த ஒன்றரை வருடமாக பிருந்தா குமாரியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.
மேலும் ரவிகுமார் கடந்த இரண்டுவருடமாக பிருந்தா குமாரி வீட்டில் டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அவர் பிருந்தா குமாரியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்தது தெறிந்தவுடன் அவரை பெற்றோர்கள் பணியிலிருந்து நீக்கியுள்ளனர். ஒருபுறம் காதல் மறுக்கப்பட்ட விரக்தி மறுபுறம் வேலையை
விட்டு நீக்கியதால் ஏற்பட்ட அவமானத்தாலும் பிருந்தா குமாரியை பலிதீர்க்க
முடிவு செய்த ரவிகுமார் கடந்த சனிகிழமை அன்று பிருந்தா ல்லூரி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது தனது நண்பர்கள் 3 பேருடன் முகமூடி அணிந்து சென்று சரமாரியாக வெட்டியுள்ளார். குறிப்பாக பிருந்தாவின் முகத்தை குறிவைத்து ரவிகுமாரும் அவரது நண்பர்களும் வெட்ட முயற்சிசெய்துள்ளனர்.
இந்த தாக்குதலில் தன்னை பாதுகாத்துகொள்ள பிருந்தா தனது கையால் தடுத்து முயற்சி செய்த போது சுமார் பத்துக்கும் மேற்பட்ட வெட்டுகள் பிருந்தாவின் இரண்டு கைகளிளும் விழுந்து அவர் கைகள் துண்டாகும் நிலைக்கு காயம் அடைந்தது. மண்டியா அரசுமருத்துவமனியில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் உடனடியாக பிருந்தாவை பெங்களூரில் உள்ள ஹொஸ்மட் மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.
கடந்த இரண்டு தினங்களாக சுமார் 14 மணிநேரம் அருவைசிகிசைக்கு பிறகு பிருந்தாவின் கைகள் தற்பொழுது பாதுகாக்கப்பட்டுள்ளன.குறைந்தது 6 வாரங்கள் பிருந்தா ஓய்வு எடுக்கவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மண்டியா காவல்துறையினர் தனிப்படை அமைத்து ரவிகுமாரை கைது செய்துள்ளனர். மேலும் ரவிக்குமாருடன் இந்த தாக்குதலில் ஈடுபட்ட இருவர் தலைமறைவாக உள்ளதால் அவர்களை கைது
செய்ய தீவிர தேடுதல்வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment