ஒரு பதவி ஒரு பென்ஷன் திட்டம்: பதக்கங்களை திருப்பி அளித்த முன்னாள்
ராணுவ வீரர்கள் மத்திய அரசின் விருதுகளையும், அங்கீகாரங்களையும் திருப்பி அளிக்கும் தற்காலத்திய போக்கை அடியொட்டி ஒரு பதவி ஒரு பென்ஷன் திட்டத்தில் கோரிக்கையை முழுமையாக ஏற்காத மத்திய அரசை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர்கள் தங்கள் பெற்ற பதக்கங்களை திருப்பி அளித்தனர்.
போருக்காக பெற்ற பதக்கங்கள் மற்றும் பிறவற்றை அங்கீகரித்து வழங்கிய
பதக்கங்களை முன்னாள் ராணுவ வீரர்கள் சண்டிகர் அருகே பஞ்சகுலாவில்
உதவி ஆணையரிடம் திருப்பிக் கொடுத்தனர். அதே போல் ஜலந்தர், அமிர்தசரஸ், பாடியாலா, ரோஹ்டக், ஹிசார், அம்பாலா ஆகிய இடங்களிலும் முன்னாள் ராணுவ வீரர்கள் தங்கள் பதக்கங்களை திருப்பி அளித்ததாக தகவல்கள் வந்துள்ளன.
ஒரு பதவி ஒரு பென்ஷன் திட்டத்தை வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர்கள் நடத்திய போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மோடி அரசு
மேற்கொண்ட அறிவிப்பின் மேல் தற்போது தங்கள் எதிர்ப்பைத் திருப்பியுள்ளனர் முன்னாள் ராணுவ வீரர்கள். மோடி அரசு தங்களுக்கு அளித்த வாக்குறுதியில் பின்வாங்கியதால் இந்த தீபாவளி 'கருப்பு தீபாவளி' தினமாக அனுசரிக்க போவதாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment