Friday, November 13, 2015

திப்பு ஜெயந்தி விழா - போராட்டம்

கர்னாடகாவில் நவம்பர் 10ம் தேதி அன்று திப்பு ஜெயந்தி விழா
கொண்டாட்டத்தின் போது விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் போராட்டம்
நடத்தினர். இதில் குடகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விஷ்வ இந்து பரிசத் அமைப்பினர் போராட்டம் நடத்திய போது வன்முறை வெடித்தது.

இச்சம்பவத்தின் போது குடகு மாவட்ட விஷ்வ இந்து பரிட்சித் அமைப்பின்
மாவட்ட செயலாளர் குட்டப்பா பலியானார். இது விபத்து அல்ல கொலை என்றும் மாநில அரசு நீதி விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தியும், கெம்ப கவுடா விமான நிலையத்திற்கு திப்பு சுல்தான் பெயரை சூட்ட வேண்டும் என் கூறிய எழுத்தாளர் கிரிஷ் கார்னாடை கண்டித்தும் நவம்பர் 11 அன்று பெங்களூரு டவுன் ஹால் முன்பு விஷ்வ இந்து பரிட்சித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் சித்தராமையா முஸ்லீம்களின் ஆதரவை பெறுவதற்காக திப்பு ஜெயந்தி விழாவை கொண்டாடுவதாகவும் குற்றம் சாட்டினர்.


இதனிடையே கிரிஷ் கார்னாடின் பேச்சை கண்டித்து பாஜக சார்பிலும் பெங்களூருவில் போராட்டம் நடத்தப்பட்டது. வாக்கு வங்கியை பெறுவதற்காக காங்கிரஸ் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது என்றும், காங்கிரசின் இந்த செயல் பெங்களூரு நகரை வடிவமைத்த கெம்ப கவுடாவை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது என்றும் பாஜக வினர் குற்றம் சாட்டினர். இதனிடையே இதுகுறித்து கர்னாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் கேட்டபோது, குடகு சம்பவத்தை வைத்து பாஜகஅரசியல் செய்து வருவதாகவும், அரசியல் சுயலாபத்திற்காக மக்களை தூண்டிவருவதாகவும் குற்றம் சாட்டினார். ஏற்கனவே இதுகுறித்துவிசாரணை நடத்த மைசூர் மண்டல ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலும் பலியான குட்டப்பாவின் குடும்பத்திற்கு 5 லட்சம் ஈழப்பிடும் அரசு அறிவித்துள்ளதாகவும் கூறினார்.

போராட்டத்தின் போது போலீசாரிடமிருந்து தப்பியோட முயன்ற குடகு மாவட்ட விஷ்வ இந்து பரிட்சித் அமைப்பின் செயலாளர் குட்டப்பா 15 அடி சுவர் மீது ஏற முயன்று தவறி விழுந்து பலியானார். ஆனால் இந்து  அமைப்பை சேர்ந்தவர்கள், குட்டப்பா முஸ்லீம் அமைப்பினரால் கொலை செய்யப்பட்டார் என குற்றம் சாட்டி வரும் விஷ்வ இந்து அமைப்பினர், நவம்பர் 13 அன்று கர்னாட மாநிலத்தின் மைசூரு, கோலார், சிக்மகளூரு ஹாசன் ஆகிய மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். 

No comments: