இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் தமிழர்களின் பங்கு முக்கியமானது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில் மலேசியவாழ் தமிழர்களிடையே, பிரதமர் மோடி வணக்கம் என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் உள்ள நட்பு, வெறும் முகத்தில் மட்டுமே சிரிப்பைக் காட்டும் நட்பு இல்லை என்று கூறினார். திருவள்ளுவரின் "முகநக நட்பது நட்பன்று" என்ற குறளுக்கேற்ப, இந்திய -மலேசிய நட்பு உணர்ச்சிப்பூர்வமாக அமைந்திருப்பதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் தமிழர்களின் பங்கு அளப்பரியது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, மலேசிய வாழ் இந்தியர்களின் அன்பும், நட்பும் தனது இதயத்தில் சிறப்பிடம் பெற்றிருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். கோலாலம்பூரில் உள்ள இந்திய கலாச்சார மையத்திற்கு நேதாஜியின் பெயர் சூட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment