கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் மதகில் ஏற்பட்ட பழுது காரணமாக தொடர்ந்து இரண்டாவதாக நாளாக சுமார் 1000 கன அடி தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது இதனால் அணையின் நீர் மட்டம் குறைந்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கடந்த பத்து நாட்களாக பெய்த கனமழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை தன் முழு கொள்ளளவை எட்டி இருந்தது. தொடர்ந்து கடந்த பத்து நாட்களாக முழு கொள்ளளவான 52 அடியில் இருந்த நீர்மட்டம் தற்போது மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது, இதனால் அதிகாரிகள் அணையில் பிரதான ஏழாவது மதகு வழியாக வெளியேற்றப்பட்ட நீரை நிறுத்த முற்பட்டனர் அனால் மதகு பழுது காரணமாக மூட முடியவில்லை.
இதனால் அதிகாரிகள் இயந்திரங்கள் மூலம் மதகை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர் ஆனால் இன்னமும் மதகு சரிசெய்ய முடியாததால் அணையில் இருந்து சுமார் 1000 கன அடி நீர் தொடர்ந்து ஆற்றில் கலந்து வீணாகி வருகிறது, இதனால் அணையின் நீர்மட்டம் 52 அடியில் இருந்து 50.95 ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருவதால் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment