பள்ளி மாணவர்கள் தங்கள் சாதியை அடையாளப்படுத்திக்கொள்ளும் கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது தொடர்பாக, தமிழக அரசு விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், அவரவர் சாதியை அடையாளப்படுத்திக் கொள்ளும் விதமாக, கைகளில் வண்ண கயிறுகளை கட்டுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, செய்திகளும் ஓரிரு வாரங்களுக்கு முன்பு வெளியாயின. மாணவர்கள் மத்தியில் சாதீய உணர்வு மேலோங்கி வருவதால், பள்ளிகளில் மோதல் சம்பவங்கள் உருவாகும் நிலை உருவாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, இந்த பிரச்சினையை, தேசிய மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து, விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, தமிழ்நாடு சமூக நீதித்துறை மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment