போலி குடிநீர் நிறுவனத்துக்கு அபராதம்
காஞ்சீபுரம் மாவட்டம், செவிலிமேடு கிராமத்தில் கோகுல் அக்வா ஃபுட் புராடக்ட் நிறுவனம், போலியான ஐ.எஸ்.ஐ. முத்திரையை குடிநீர் கேன்களில் ஒட்டி விற்பனை செய்து வருவதாக வந்த ரகசிய தகவலையடுத்து, இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனமான பி.ஐ.எஸ். அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 20 லிட்டர் பெட் பாட்டில்களில் அக்வா பிரைட் என்ற வணிகப் பெயரில் வேறு ஒரு நிறுவனத்திற்கு சொந்தமான ஐ.எஸ்.ஐ. தரச் சான்றிதழ் எண்ணை சட்ட விரோதமாக இந்த நிறுவனம் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதையொட்டி அந்த குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஐ.எஸ்.ஐ. முத்திரையை தவறாக பயன்படுத்திய நிறுவனம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த குற்றத்திற்கு ஒரு வருட சிறை தண்டனை அல்லது ரூ. 50000 அபராதம் அல்லது இவை இரண்டும் பி.ஐ.எஸ். சட்டம் 1986ன் படி தண்டனை விதிக்கப்படும்.
ஐ.எஸ்.ஐ. தர முத்திரையை தவறாக பயன்படுத்துபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் பி.ஐ.எஸ். நிறுவனத்திற்கு 044-22542168 என்ற தொலைபேசி எண்ணிற்கோ அல்லது sro@bis.org என்ற இமெயில் முகவரிக்கோ தெரிவிக்கலாம். அவர்கள் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று பி.ஐ.எஸ். நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment