விஜயகாந்த் கல்லூரி நிர்வாகிகள் மீது புகார் ஆள் வைத்து தாக்கியதாக துணைபேராசிரியர் குற்றச்சாட்டி உள்ளார்.
ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் துணைபேராசிரியராக பணியாற்றியவர் விக்ரம். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், கல்லூரி நிர்வாகம் பல மாதங்களாக சம்பளம் தரவில்லை என்றும் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களை கல்லூரியில் சேர்த்துவிட தன்னை போன்ற ஆசிரியர்களை கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த செயலை கண்டித்து தான் கல்லூரியில் துண்டு பிரசரம் விநியோகம் செய்யதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி தன்னை மிரட்டியதாகவும் கூறியுள்ளார். கடந்த 15-ம் தேதி கல்லூரி அருகே இருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் தன்னை தாக்கியதாகவும், ஆண்டாள் அழகர் கல்லூரிக்கு எதிராக பேசக்கூடாது என்று மிரட்டி விட்டு சென்றாகவும் அந்த புகார் மனுவில் விக்ரம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment