Sunday, November 15, 2015

அதிக கட்டணம் வசூலித்த நடத்துனருக்கு அபராதம்

கொழும்பில் இருந்து மாத்தளைக்கு பயணித்த தனியார் சொகுசு பேருந்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த  நடத்துனருக்கு 2,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் பேருந்தை இரண்டு தினங்களுக்கு சேவையிலிருந்து இடைநிறுத்துவதற்கும் மத்திய மாகாண தனியார் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பிலிருந்து மாத்தளைக்கான கட்டணம் 295 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் சொகுசு பேருந்து, பயணிகளிடம் 355 ரூபா கட்டணம் வசூலித்ததாக மத்திய மாகாண தனியார் போக்குவரத்து அதிகார சபையிடம் முறைபாடு செய்யப்பட்டிருந்தது. 
சம்பந்தப்பட்ட பஸ் வண்டியின் நடத்துனரையும் உரிமையாளரையும் மத்திய மாகாண தனியார் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஏ.ஜீ. ரணசிங்க விசாரணைக்கு உட்படுத்தினார். இதனையடுத்து பஸ் நடத்துனருக்கு அபராதமும் குறிப்பிட்ட பஸ் வண்டிக்கு இரண்டு நாள் போக்குவரத்து தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

No comments: