Sunday, November 15, 2015

செஸ் போட்டியில் 11 பதக்கங்கள் வென்று சாதனை

கிரீஸ் நாட்டில் நடைபெற்ற உலக சிறுவர் சிறுமியர்க்கான செஸ் போட்டியில் பதக்கங்கள் வென்றவர்கள் சென்னை திரும்பினர்.

உலகளவில் சிறுவர் சிறுமியர்க்கான செஸ் போட்டி கடந்த வாரம் கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஐம்பது பேர் பங்கேற்றனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட இந்திய சிறுவர் சிறுமியர்கள் மொத்தம் 11 
பதக்கங்களை வென்றுள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்த மகாலட்சுமி, வைசாலி, பிரக்கனந்தா, ரக்‌ஷிதா மற்றும் பரத் ஆகியோர் வெவ்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு தங்க பத்தகங்களை வென்றுள்ளனர். மேலும் வர்ஷினி மற்றும் தேவ் ஷா ஆகியோர் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர்.


இந்த உலக தர செஸ் போட்டியில் இதற்கு முன்பு இந்தியா சார்பில் பங்கேற்றவர்கள் கடந்த 2006ம் ஆண்டு ஐந்து தங்க பதக்கங்களை வென்றனர். அதன் பிறகு 9 வருடங்களுக்கு பிறகு அதிக பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

இன்று அதிகாலை சென்னை திரும்பிய பதக்கங்கள் வென்ற சிறுவர் சிறுமியர்க்கு ஆல் இந்தியா செஸ் பெட்ஃரேஷன், பெற்றோர் மற்றும் உறவினர் சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

No comments: