150 வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு 150 வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன
அமைச்சர் மெய்யநாதன் , சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கற்பு
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு சென்னை பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர்கள் சிவ.வி.மெய்யநாதன் , சேகர்பாபு , சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் , நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பங்கேற்று 150 வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.
இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த் பிறந்தநாள் ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வரும் சூழலில் ' நண்பன் sports foundation ' அறக்கட்டளை சார்பில் 150 விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் , சீருடைகள் வழங்கப்பட்டன .
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் , இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபு , சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் , எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் , மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் நீச்சல் வீரர் குற்றாலீசுவரன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நீச்சல் வீரரான குற்றாலீசுவரன் நண்பன் அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டு 14 விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒருவருக்கு தலா 10 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று கூறினார்.
No comments:
Post a Comment