தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கிய மிதிவண்டி பயணம் பிரான்ஸ் நாட்டை சென்றடைந்தது .
7 வது நாளாக தொடரும் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கிய மிதிவண்டி பயணம் இன்று மதியம் பிரான்ஸ் நாட்டை சென்றடைந்தது. யேர்மன் மனிதநேய செயற்பாட்டாளர்கள் மிதிவண்டி பயணத்தை பிரான்ஸ் செயற்பாட்டாளர்களிடம் Saargemünd நகரில் பொறுப்பு கொடுத்தார்கள்.
தொடர்ந்து Saargemünd நகரபிதாவும் நாடாளுமன்ற உறுப்பினருமானவரின் உதவி முதல்வர்களுடன் அரசியல் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. அத்தோடு பிரான்சில் அரசியல் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்கப்பட வேண்டும் எனவும், நடைபெற்ற கொலை தாக்குதலுக்கு விசாரணை நடாத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இச் சந்திப்பில் பிரான்ஸ் உள்ளூர் ஊடகங்களும் வருகைதந்து , ஐநா நோக்கிய மிதிவண்டிப்பயணம் தொடர்பாக பதிவுகளை மேற்கொண்டனர். Saargemünd நகரை தொடர்ந்து ஏனைய ஒரு நகர முதல்வருடனும் சந்திப்பு நடைபெற்று மனுக்கையளிகப்பட்டது. இங்கும் உள்ளூர் ஊடகம் கலந்துகொண்டு செய்திகளை சேர்த்தது குறிப்பிடத்தக்கது . இன்றைய பயணம் 85 Km தூரத்தை கடந்து நிறைவடைந்தது.
No comments:
Post a Comment