சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெல்லிங்கடன் கல்லூரி பெயரை மாற்றி விட்டு அதற்கு சுதந்திர போராட்ட வீரர் சிங்காரவேலரின் பெயரை வைக்க கோரி கவுதமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக ஏற்கனவே உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே, சிங்காரவேலரின் தியாகத்தை போற்றும் வகையில் அவருக்கு நினைவில்லம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிங்காரவேலரின் நினைவை போற்றும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை சுட்டிக்காட்டினர். மேலும் வில்லிங்டன் கல்லூரியின் பெயரை மாற்றுவது குறித்து தாங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைப்பதாகவும் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment