Tuesday, July 21, 2015

தி.மு. கழகம் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு

தமிழ்நாட்டில் தற்போது மதுவிலக்கு இல்லாத காரணத்தால் - ஏழையெளிய விவசாயப் பெருங்குடி மக்கள், தொழிலாளத் தோழர்கள், ஏன், மாணவர்களும் கூட தொடர்ந்து , மனம் போன போக்கில் மதுவை அருந்தி, நூற்றுக்கணக்கில் உயிர்ப்பலி ஆகிறார்கள்.


இந்தக் கொடுமைக்கும், கொடூரப் பழக்கத்திற்கும் ஆண்கள் மட்டுமன்றி தாய்மார்களும், பச்சிளம் குழந்தைகளும் பலி ஆகிறார்கள் என்ற செய்திகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

மீண்டும் மதுவிலக்கு சட்டத்தை நடைமுறைப் படுத்தினால் என்ன என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. எனவே தி.மு. கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு தலைவர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments: